‘விமல், கம்மன்பிலவின் காலை வாரிவிட்டார் மைத்திரி’

” மைத்திரிபால சிறிசேனவை நம்பி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இன்று அமைச்சு பதவிகள் இன்றி தவிக்கின்றனர்.” – என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். .

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டை சீரழித்த நபர்தான் மைத்திரிபால சிறிசேன. அவரை நம்பிதான் விமல், கம்மன்பில ஆகியோர் இவ்வாறு செயற்பட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்து அமைச்சு பதவிகள் பறிக்கப்பட்ட பின்னர், மைத்திரிபால சிறிசேன காணாமல்போய்விட்டார்.

கொழும்பில் பங்காளிக்கட்சிகளால் நடத்தப்பட்ட கூட்டத்துக்கு வந்த அவர், நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்புக்கு வரவில்லை. இதுதான் மைத்திரியின் சந்தர்ப்பவாத அரசியல். அவர்கள் இவரை நம்பினர். இவர், அவர்களின் காலைவாரிவிட்டார்.” – என்றார்.

Related Articles

Latest Articles