‘வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்பு’ – மேலுமொரு சந்தேகநபர் கைது!

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் திருகோணமலையில் வசிக்கும் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு வெடிகுண்டு தயாரிக்க குறித்த நபர் உதவியதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles