‘ ஹட்டனில் சுகாதார பரிசோதகர் சுயதனிமையில்’

ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் சுகாதார பரிசோதகர் ஒருவர் பாதுகாப்பு காரணம் கருதி அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் இன்று (26.10.2020) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஹட்டன் நகரில் அமைந்துள்ள மீன் வியாபார நிலையத்தின் உரிமையாளர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தாலேயே ஹட்டன் டிக்கோயா நகர சபைiயின் சுகாதார பரிசோதகர் பாதுகாப்பு காரணம் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார பரிசோதகரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றவுடன் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.” எனவும் நகர சபை தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சுகாதார பரிசோதகர் மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்துள்ளமை தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே அவரை அழைத்து விசாரித்தபோது அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

நுவரெலியா  நிருபர் எஸ்.தியாகு

Paid Ad