ஹப்புத்தளையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் படுகாயம்

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராத்கராவ பகுதியில் ஆட்டோவொன்று விபத்துக்குள்ளனதில் ஆட்டோ ஓட்டுநரும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பில் இருந்து பொரலந்த பகுதியில் அமைந்துள்ள தமது வீடுக்கு திரும்பும் போதே இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து ஹப்புத்தளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles