அதிகாரம் ரணிலிடமா? மஹிந்தவிடமா? செல்வம் எம்.பி.கேள்வி

ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னரும் சில செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. உண்மையில் அதிகாரம் ஜனாதிபதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (15) இடம்பெற்ற கிறிஸ்ரி குகராஜாவின் நினைவுதினத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

குகனது இழப்பு வவுனியாவிற்கு பாரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கின்றது. வவுனியாவில் வாள்வெட்டு அதிகரித்துள்ளது. கடத்தல் சம்பவங்கள் பணம்பறிப்பு, தற்கொலை என்பன இடம்பெற்று வருகின்றது. பொலிசார் இருந்தும் வவுனியா ஒரு மோசமான நிலையை அடைந்துள்ளது.

பொலிசாருக்கு பொறுப்பான அமைச்சர் வவுனியா மாவட்டம் மீது கவனம் செலுத்தவேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் மரணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறான அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும்.

இதேவேளை நாடு முழுவதும் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாகி உள்ளது. எனவே ஜனாதிபதி இதற்கான பதிலை மக்களுக்கு சொல்லவேண்டும். முப்படைகளை களம் இறக்கி மக்களை அச்சுறுத்துவது தவறான செயற்பாடகவே நான் பார்க்கிறேன்.

அண்மையில் ஜனாதிபதியுடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. சில விடயங்கள் தொடர்பாக அவர் உத்தரவிட்ட பின்னரும் அதனை மீறும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடு வன்னியிலும் பரவலடைந்துள்ளது. எனவே அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கிறதா அல்லது மகிந்த ராஜபக்சக்களின் கைகளில் இந்த திணைக்களங்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கும் இருக்கின்றது.

மகிந்த தான் அவர்களுக்கு கட்டளை இடுகின்றாரா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.மொட்டு கட்சியை காப்பாற்றும் செயற்பாட்டை அவர் மேற்கொண்டால் அவர் செய்யும் நற்செயல்களுக்கும் கெட்ட பெயரே ஏற்படும் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles