“அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வந்துகொண்டுள்ளது. ஆனால் ஆதரவு வந்துமட்டும் பயன் இல்லை. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் திட்டமொன்று அவசியம்.” -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜே.வி.பியில் எத்தனை பெண் உறுப்பினர்கள் உள்ளனர், அங்கு இல்லை. தேசிய மக்கள் சக்தியில்தான் பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஜே.வி.பியின் கடந்தகாலம் பற்றி நான் பேச விரும்பவில்லை எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
ஜே.வி.பியினருக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான கொள்கைகளில்கூட வேறுபாடுகள் உள்ளன எனவும் இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வடக்கு, கிழக்கு, மலையக வாக்குகள் கிடைக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜே.வி.பிக்கு இவ்வாறு ஆதரவு வந்தாலும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ஆதரவு கிட்டுமா என்பது சந்தேகமே….எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
