அனுபவமில்லாதவர்களை நாடாளுமன்றம் அனுப்புவது ஆபத்து

அனுபவம் இல்லாதவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ்சுக்கு நடந்ததுபோல்தான் நாட்டுக்கு நடக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததுபோதும், எவரேனும் பதவி விலகி வாய்ப்பளித்தால்கூட வரப்போவதில்லை. எனினும், அனுபவம் உள்ளவர்கள் நாடாளுமன்றம் வரவேண்டும்.

ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு அனுபவம் இல்லை. சிலிண்டர் அணியிலேயே அனுபவம் உள்ளவர்கள் உள்ளனர். குறுகிய காலப்குதிக்குள் நாட்டை மீட்ட அனுபவம் உள்ளது.

அனுபவம் இல்லாதவர்களிடம் எதிர்காலத்தை ஒப்படைப்பது ஆபத்தானது, பஸ் செலுத்துவதற்குகூட சாரதிக்கு சைலன்ஸ் வேண்டும். எனவே, அனுபவம் இல்லாதவர்களிடம் வழங்கினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பஸ்சுக்கு நடந்ததுபோல்தான் நாட்டில் நடக்கக்கூடும்.

நான் ஆளுங்கட்சியுடன் மோதவில்லை. அவர்கள்தான் என்னுடன் மோதுகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles