ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க 44 சதவீத வரியை விதித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காகவே சர்வக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.