அரசாங்கத்திற்கு கால அவகாசம் ;ரயில் சேவைகள் முடங்கும் அபாயம்!

ரயில்வே தொழிற்சங்கங்கள் மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பி. விதானகே தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த காலப்பகுதிக்குள் தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவு அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles