‘அரசியல் தீர்வுக்கு தென்கொரியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’

தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை வழங்குமாறு இலங்கை அரசுக்கு, தென்கொரியா அரசு ஆலோசனை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். சபை நடவடிக்கைகளையும் கண்காணித்தார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த தென்கொரிய சபாநாயகரை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அம்மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தென்கொரிய அரசும் தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

” இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றது. பலர் அந்நாட்டில் வேலை செய்கின்றனர். எனவே, இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கும்,  தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குமாறு தென்கொரிய சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” -எனவும் தமதுரையில் சார்ள்ஸ் எம்.பி. குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles