அரச கூட்டுக்குள் குழப்பம்! பங்காளிகளுடன் ஜனாதிபதி இன்று மந்திராலோசனை!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று மாலை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் நேற்று முன்தினம் புறக்கணித்திருந்த நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளமை முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். மொட்டு கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles