அவுஸ்திரேலிய ஓப்பன் சம்பியன் பட்டத்தை வென்ற நவோமி ஒசாகா : கிராண்ட்ஸ்லாம் வேட்டை தொடர்கிறது

மெல்போர்னில் சனிக்கிழமை (20) நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓப்பன் இறுதிப் போட்டியில் ஜெனிஃபர் பிராடியைத் தோற்கடித்து நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 23 வயது நவோமி ஒசாகா தனதாக்கினார்.

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மகளீர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி மெல்போர்னில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் களமிறங்கிய ஜப்பானின் நவோமி ஒசாகா (Naomi osaka) தன்னை எதிர்த்து ஆடிய அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை (Jennifer brady) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம் ஒசாகா தனது நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்..

இதற்கு முன்னர் அறையிறுதியில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை இவர் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Naomiosaka #AustralianOpen #tennis

Previous article21/4 தாக்குதல் – ஜனாதிபதியின் புதிய குழுவை ஏற்கமுடியாது! பேராயர் திட்டவட்டம்!
Next article‘களுத்துறை பெருந்தோட்ட மக்களை மறந்த மலையகக் கட்சிகள்’