” ஆசிரியர் உதவியாளர் நியமனத்திற்கு உதவி செய்தவர்களை விட உரிமை கோறுபவர்களே அதிகம்”

ஆசிரிய உதவியாளர்களின் பெரும்பான்மையானவர்கள் தற்போது ஆசிரியர் சேவைக்கு உள் வாங்கப்பட்டுடிருப்பதற்கு உதவி செய்தவர்களை விட உரிமை கோருபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரிய உதவியாளர்கள் பத்தாயிரம் ரூபா சம்பளத்தில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து கொண்டிருந்த போது அமைதியாக இருந்தவர்கள் நியமனங்கள் கிடைத்தவுடன் உரிமை கொண்டாடுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றனர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது அதில் அமைச்சராக இருந்த திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இவர்களுக்கு நியமனத்தை பெற்றுக் கொடுத்து ஆசிரியர் சேவைக்குள் உள் வாங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வழங்க தீர்மானித்திருந்த நியமனத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தடுத்து நிறுத்திய போது வாய் திறக்கவே இல்லை. பாராளுமன்றத்தில் அமைச்சு அந்தஸ்தில் இருக்கும் போது பெற்றுக் கொடுக்க முடியாததை எதிர்க்கட்சியில் இருக்கும் போது பெற்றுக் கொடுத்ததாக உரிமை கொண்டாடுவது பெரும் நகைப்புக்குரிய விடயமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக கடந்த இரண்டரை வருடங்களில் 1500க்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டு அதற்குரிய சம்பளத்தை பெற்றுக் கொண்டு வருகின்றனர். ஆசிரியர் உதவியாளர்களை நியமனத்தை தடுத்து நிறுத்தியபோது அதற்கு எதிராக குரல் கொடுத்து ஜனாதிபதி கூட்டிய சர்வ கட்சி மாநாட்டை பகிஷ்கரிப்பு செய்து ஆசிரிய உதவியாளர்களுக்கு அணியாயம் இளைக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சாகும். அத்துடன் நியமனத்தை இதுவரை வழங்காமல் இருந்தது அரசாங்கத்தின் பாரிய தவறு என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணர்த்தி நியமனம் வழங்குவதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடாகும்.

எதிர்க் கட்சியினர் பாராளுமன்றத்தில் பேசுகின்ற விடயங்கள் நடைமுறைக்கு வருவதாக இருந்தால் இன்று மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப் பட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் சொல்லுகின்ற விடயங்களை எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு ஆசிரிய உதவியாளர்கள் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. அதேபோல ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் போராட்டத்தின் போது இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தியிருந்தால் இந்தப் பிரச்சனை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும். விளம்பரத்துக்காக வேலை செய்பவர்களின் வெளி வேஷம் ஆசிரியர் உதவியாளர்களை நியமனத்திலும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles