ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளியாட்களால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தமித்த குமாரசிங்கவுக்கும் பேராசிரியர் மொஹான் சமரநாயக்க ஆகிய இருவருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு அளித்துள்ளனர்.

அன்று நாம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அமைந்துள்ள கட்டடத்திற்குள் வருகை தந்திருக்கின்றோம் என்பதை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் மாத்திரமே அறிவர். இந்த தகவலை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் எவ்வாறு அறிவார்கள் என்றும் , ஊடகங்களையும் அழைத்துக் கொண்டு அவர்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்தது எவ்வாறு என்பது தொடர்பிலும் துரிதமாக கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles