விலைவாசி உயர்வை ஒப்பிடும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 426 ரூபா கிடைக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
“ஆயிரம் ரூபா வழங்கப்படும் என 2015 மே மாதம் வாக்குறுதியளிக்கப்பட்டது. 2020 இலும் அந்த தொகை பற்றியே பேசப்படுகின்றது.
ரூபாவின் பெறுமதி, விலைவாசி உயர்வு, வாழ்க்கைச்செலவு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இன்று எமக்கு ஆயிரத்து 426 ரூபா கிடைக்கவேண்டும். எனவே, ஆயிரம் ரூபா என்பது போதாது.
எமது இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தால், பெற்றோரின் சுமை குறையும். பொருளாதாரம் மேம்படும். ” – என்றும் அவர் குறிப்பிட்டார்.