இந்த நாட்டில் தமிழர்களுக்கு கஞ்சி காய்ச்சுவதற்குகூட உரிமை இல்லையா?

“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் நேற்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி எதற்காக அருந்தப்படுகின்றது என விளக்கிய அவர், இதற்காக கைதுகள் இடம்பெறுவது அராஜக செயல் எனவும் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம் தொடர்பில் திருகோணமலை, மூதூர் – சேனையூர் பகுதியில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், பொலிஸ் அராஜகம் முடிவுக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

“ வலிகளுடன் வாழும் தமிழ் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கப்போகின்றது? நீதி, நியாயம் இல்லாதவரை இந்த நாடு அதளபாதாளத்தை நோக்கியே செல்லும். கர்மவினைகள் உங்களை ஒருபோதும் மீள விடாது.” எனவும் சிறிதரன் எம்.பி. விமர்சனம் முன்வைத்தார்.

“நீதி வழங்குங்கள், ஒரு நியாயமான – கௌரவமான அரசியல் தீர்வை முன்வையுங்கள். அழிந்துபோன மக்களுக்கு, கஞ்சிக்காக ஏங்கிய மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை, இப்போதுகூட கஞ்சி காய்ச்சுபவர்களை கைது செய்கின்ற நாடென்றால் இது இவ்வளவு கேவலமான நாடு?” எனவும் தனது ஆதங்கத்தை சிறிதரன் எம்.பி. வெளியிட்டார்.

“ நான் இந்த சிரட்டையை சபா பீடத்துக்கு சமர்ப்பிக்கின்றேன். இதுதான் முள்ளிவாய்க்காலில் கஞ்சி வழங்கிய சிரட்டை, குடிப்பதற்கு ஒரு உபகரணம் இருக்கவில்லை, காய்ச்சுவதற்கு அரிசி இல்லை, உப்பு இல்லை, தண்ணீர் எடுப்பதற்குகூட பிரச்சினை, இந்நிலையில் வெறும் உப்பில்லாத கஞ்சியை காய்ச்சி இந்த சிரட்டையிலேதான் குடித்து உயிர்தப்பினர் .

எனவே, முள்ளிவாய்க்கால் அடையாளமாக இந்த சிரட்டையை சபாபீடத்தில் சமர்ப்பிக்கின்றேன். தயவு செய்து, நாடாளுமன்றத்தின் நூதன சாலையில் இதை வையுங்கள்.” -எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles