இனப்பிரச்சினைக்கு தீர்வு: வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்து!

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு என்பன தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.

” புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என தனது ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். விரைவில் அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றெல்லாம் உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. எனினும், புதிய அரசியலமைப்பு தொடர்பில் அவர் தற்போது ஒரு வசனம் கூட கதைப்பதில்லை.குறைந்தபட்சம் எப்போது இதற்குரிய பணி ஆரம்பமாகும். எப்போது நிறைவுபெறும் என்பது தொடர்பில் கூட கருத்துத் தெரிவிப்பதில்லை.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் நாட்டில் அரசியற் கலாசாரத்தை மாற்றுவதற்கு இருந்த வாய்ப்பை அவர் இல்லாமல் செய்து வருகின்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து அதிகாரத்தைச் சுவைத்து வருகின்றார். அதற்கு அப்பால் சென்று, அரசியலமைப்பு மறுசீரமைப்பைச் செய்வதற்கும் அவர் தயாரில்லை என்பது தெரிகின்றது
.
மேற்படி உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாதுள்ள சூழ்நிலையில் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மையை இல்லாது செய்வதற்கும். அரசியலமைப்பு சபையின் அதிகாரத்தைக் குறைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செய்யப்ப டவுள்ளது எனவும் கூறப்படுகின்றது. இது பாரதூரமான விடயமாகும். புதிய அரசியலமைப்பு எனக்கூறிவிட்டு, மக்கள் ஆணையை மீறும் வகையில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள உள்ளன.” – என அஜித் பி பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles