நாட்டில் இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி 25 ஆம் திகதி காலை 4 மணிவரை கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு ஜுன் 21 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் ‘போயா’ தினம் காரணமாக, மக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்காகவே மீண்டும் பயணத்தடை போடப்படவுள்ளது.
அத்துடன், வார இறுதி நாட்களில் பயணத்தடை அமுலுக்கு வருமா என்பது பற்றி இன்னும் அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.