இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்!

கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறியும், கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.டீ.பாடிகோராலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து, புதிய செயலாளர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Related Articles

Latest Articles