இலங்கைக்கு 3ஆவது கடன் தவணையை வழங்குகிறது ஐஎம்எப்!

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணை கொடுப்பனவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட 48 மாதங்களுக்கான கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவினால் நேற்றிரவு நிறைவுபெற்றதையடுத்து, மூன்றாவது தவணை வழங்கப்பட்டுள்ளது.

தமது வேலைத்திட்டத்தின்கீழ் இலங்கை முன்னேற்றத்தை தெளிவுபடுத்தியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்றாவது கடன் தவணைக்கமைய இலங்கைக்கு 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.

 

Related Articles

Latest Articles