இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் ஜெனரல் குணரத்ன மற்றும் கேர்ணல் பிராங்கோயிஸ் ஆகியோரிக்கிடையில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்கு இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புக்களால் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளரால் விளக்கப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்தும் இதன்போது நினைவுகூரப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
