இலங்கை மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம் இந்தியாவின் கையில்

இலங்கைக்கு தேவையான உணவு பொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் ஆயிரம் மில்லியன் டொலர் கடன் சரியான முறையில் கிடைக்கும் வரை தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த கடனுதவி கிடைக்கவில்லை என்றால், உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மாற்று வழிகள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே அத்தியவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. டொலர் இல்லாத காரணத்தினால், அவற்றில் உள்ள பொருட்களை இறக்க முடியாதுள்ளது.

இந்தியாவிடம் இருந்து கடனுதவி கிடைத்தாலும் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து, இறக்குவதற்கு நீண்டகாலம் செல்லும். சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால், பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles