இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய வழக்கில், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸ் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி, ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸில் அரச புலனாய்வு சேவைக்காக பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மற்றும் திஸ்ஸமஹராம பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒருவர் ஆகியோருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி திஸ்ஸமஹாராம – தெபரவெவ, மாத்தறவத்தயில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, இரவு 12 மணியளவில் சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்து, அவரைக் கைது செய்து, பின்னர் அவரை தப்பிச்செல்லுமாறு கூறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதை விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தெபரவெவ – மாத்தறவத்தையை சேர்ந்த லொக்கு ஹென்னதிகே அமில மகேஷ் என்பவரே உயிரிழந்திருந்தார்.

இலங்கை வரலாற்றில் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒரே தடவையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles