இலங்கை வருகின்றார் ஜெய்சங்கர்! திருமலைக்கும் செல்வார்!!

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின்’ மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகின்றார்.

அவர் திருகோணமலைக்கும் செல்கின்றார். எனினும், தமிழ்க் கட்சிகளின் பிரதிதிகளை அவர் இம்முறை சந்திப்பாரா என்பது தெரியவரவில்லை.

மாநாடு நாளை புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை முற்பகல் வேளையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

மேற்படி இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் 2023 – 2025 காலப்பகுதிக்கான தலைமைப் பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுகின்றது.

கடந்த ஆண்டு மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் பின்புலத்தில் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள்’ மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இது சர்வதேச ரீதியில் பெரும் அவதானம் மிக்க மாநாடாக மாறியுள்ளது.

பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்புக்களை நடத்தவும் உள்ளார்.

அரசாங்கத்தின் சீன சார்பு கொள்கை காரணமாக இந்தியா சில அரசியல் நெருக்கடிகளை இலங்கைக்குக் கொடுத்து வருகின்றது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ் நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலகம் அறிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கையில் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள்’ மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, எஸ்.ஜெய்சங்கர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலைக்கும் செல்லவுள்ளார். அங்கு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.

திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள ஏனையத் திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வுகளை நடத்துவார் என அறியமுடிகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles