இஸ்ரேல், ஈரான் போர்: தேயிலை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்…!

 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையால் நமது நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

இது தொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,

‘இலங்கை தேயிலை ஏற்றுமதியில் ஈரான் 7 ஆவது பெரிய நாடாக காணப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில், இலங்கை 10.4 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மோதல் நிலைமை மேலும் மோசமடைந்தால், தேயிலை ஏற்றுமதிக்கு கடுமையான பொருளாதார ரீதியான பாதகம் ஏற்படும்.

செங்கடல் மற்றும் சுயஸ் கால்வாய் போன்ற கடல்சார் போக்குவரத்து மார்க்கங்கள் மூடப்பட்டால், நமது நாட்டின் கடல்சார் போக்குவரத்துத் துறையின் செலவும் அதிகரிக்கும். இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.” – என்றார்.

சஜித்தின் முழு உரை காணொளி இணைப்பு

 

Related Articles

Latest Articles