இ.தொ.காவின் உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்த் தெரிவு

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவி தேசிய அமைப்பாளராக (அரசியல் கிளை) இராஜமணி பிரசாந்த் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது.

இதன்போது இப்பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட ராஜமணி பிரசாந்த் வெற்றிபெற்றுள்ளார்.

இ.தொ.காவின் இளைஞர் அணித் தலைவராகவும் இவர் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles