ஆக்கிரமிப்பு ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு மேலதிக நிதி மற்றும் இராணுவ உதவி என்பன வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதற்காக $110 மில்லியனை செலவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே $610 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது $790 மில்லியனாக அதிகரித்துள்ளது.
கவச வாகனங்கள், சிறப்பு நடவடிக்கை வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பீரங்கி வெடிபொருட்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தகவலை பிரதமர் Anthony Albanese உறுதிப்படுத்தியுள்ளார்.
” இந்த ஆதரவு மற்றும் டஜன் கணக்கான இராணுவ வாகனங்கள், ரஷ்யாவின் சட்டவிரோத ஒழுக்கக்கேடான போரை எதிர்கொள்வதில் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தும். உக்ரேனிய மக்களுக்கு “உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.” எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.










