உங்களுக்கு விஷமாக தெரிவது எங்களுக்கு அமிர்தமாக உள்ளது : உதய கம்மன்பிலவிற்கு செந்தில் பதிலடி

தமிழ் மக்களின் உரிமைகளிலோ, சலுகைகளிலோ கைவைக்க இடமளிக்கப்போவதில்லை என பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்பை நீக்கி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விசப் பற்களைப் பிடுங்க மக்கள் பலத்தை வழங்க வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘நாட்டில் நலுக்காக அரசியல் அமைப்பில் மாற்றம் செய்வதை நாம் எப்போதும் வரவேற்போம். ஆனால், தமிழ் மக்களின் உரிமைகளிலோ, சலுகைகளிலோ கைவைக்க இடமளிக்கமாட்டோம். உங்களுக்கு விசமாக தெரிவது எங்களுக்கு அமர்த்தமாக இருக்கும். உங்களின் கருத்துக்களை மட்டும் முன்வைத்து முடிவுகளை எடுக்க இது உங்களின் அரசாங்கம் மட்டுமல்ல.

இது எங்களின் அரசாங்கமும் கூட. நீங்கள் ஆதரவளிக்கும் அனைத்தையம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு கிடையாது. எங்கள் மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் எவர் தலையிட்டாலும், பலமிக்க அரசியல் பிரதிநிதியாக நாம் நிச்சம் அதனை எதிர்ப்போம். இந்தத் தேர்தலில், உங்களை பெரும்பான்மை மக்கள் எவ்வாறு வெற்றிபெற வைப்பார்களோ, தமிழ் மக்களும் எங்களையும் பெருவாரியாக வெற்றிபெற வைப்பார்கள்.

அரசாங்கத்தின் அதிகாரப் பதவியில் இருந்துகொண்டு ஒருபோதும், அரசியலமைப்பில் எங்களுக்கு அமர்தமாக  இருக்கும் விடயங்களை மாற்றுவதற்கு கனவில் கூட செயற்படுத்தவிடமாட்டோம்..” செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles