இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆண் தடகள வீரர் தரவரிசையில் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில், உலக தடகள சம்மேளனத்தின் மதிப்புமிக்க விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 10 வீரர்களில் ருமேஷ் தரங்கவும் இடம்பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அவர், டயமண்ட் லீக் தொடரிலும் உலக தடகள அல்டிமேட் சம்பியன்ஷிப் போட்டியிலும் சம்பியன் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
மேலும், ரோமில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் வரலாற்றில் ஆசியாவின் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
