உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையைப் பெற்ற ( Rafeiro do Alentejo’s Bobi) போபி என்ற நாய் உயிரிழந்துள்ளது.
போபி என்று அழைக்கப்படும் குறித்த நாய் உயிரிழக்கும் போது , அதற்கு 31 வயதாகும்.
அத்துடன் உடல்நலக்குறைவு காரணமாக போபி உயிரிழந்துள்ளதாக கால்நடை மருத்துவர் கரேன் பெக்கர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி பிறந்த போபி, கடந்த பெப்ரவரியில் வயதான நாய் என கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










