உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்க தடை விதிப்பு!

மடுல்சீமைப் பகுதியின் சிறிய உலக முடிவு மலைப்பகுதியிலும், பதுளை – நாராங்கலைமலை உச்சிப்பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின்கூட்டம், பதுளை அரச செயலகத்தில் 23-02-2021ல் நடைபெற்றபோதே, மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, இணைப்புக்குழுத்தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.

இணைப்புக்குழுத் தலைவர் சுதர்சன தெனிபிட்டிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

‘கடந்த 6 ஆம் திகதி தினுர விஜய சுதந்தர என்ற நபர், சிறிய உலக முடிவைப் பார்க்கச்சென்று, 1200 அடிபள்ளத்தில் விழுந்து, பலியானார். இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் மலை உச்சிக்குசென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

கடுங்குளிரான காலநிலையினால், அவர்களுக்கு மலை உச்சியில் இருக்கமுடியாமல் கீழிறங்கினர். அவ்வேளையில் 1200 அடிபள்ளத்தாக்கில் தினுர விஜயசுந்தர விழுந்து மரணமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து, எடுக்கப்பட்ட முடிவிற்கமைய உல்லாசப் பயணிகள்எவரும், சிறிய உலகமுடிவு மலைப் பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதற்கு பூரண தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தகைய கூடாரங்கள் அமைத்து உல்லாசப் பயணிகள் தங்குவதால், அப்பகுதியெங்கும் சூழலும் மாசடைகின்றன.

அத்துடன், பதுளை – நாராங்க லை மலைப்பகுதிக்கு உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்துதங்குவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நாராங்கலை மலைப் பகுதியில் 64 வகையிலானமரங்கள், 24 வகையிலான செடி, கொடிகள், 22க்கு மேற்பட்ட மூலிகைவகைகள்நி றைந்துகாணப்படுகின்றன.

இந்நிலையில், உல்லாசப்பயணிகளாக, மலையுச்சிக்குசெல்வோர், வனப்பகுதிக்கு சேதம் விளைவிப்பதுடன், அங்குள்ள புனிதமான சூழலை மாசடையவும் செய்கின்றனர். அத்துடன் வரலாற்றுப் பெருமைகொண்ட இம்மலைப் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய பாரிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles