உள்ளாட்சி தேர்தல் – மனுமீதான விசாரணை மே 11 வரை ஒத்திவைப்பு!

உள்ளாட்சிசபைத் தேர்தலை இடைநிறுத்துவதற்கு உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மே மாதம் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை) டபிள்யூ.எம்.ஆர். விஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு மீதான தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, தேர்தக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles