ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடம்! இலங்கை…?

உலகில் ஊழல்கள் குறைந்த முதல் 10 நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில் இலங்கை 121 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ட்ரான்பெரன்ஷி இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு, ஊழல்கள் தொடர்பில் நாடுகளின் கண்ணோட்ட குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் உட்பட் 13 தரவுகளின்படி பூஜ்ஜியம் முதல் 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது.

இதில், ஊழல் மிகுந்த நாடு என்றால் பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், ஊழல் அற்ற நாடு என்றால் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நாடுகள் தரவரிசைப் படுத்தப்படுகின்றன.

அதன்படி, 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், ஊழல் குறைந்த முதல் 10 நாடுகளில் டென்மார்க் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

2 ஆவது இடத்தில் பின்லாந்தும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தும் உள்ளன.  இந்தப் பட்டியலில் இந்தியா 96வது இடத்தைப் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு 39 மதிப்பெண் பெற்று 93ஆவது இடத்தைப் பெற்ற இந்தியா, கடந்த ஆண்டு 38 மதிப்பெண் பெற்று 96ஆம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.

தெற்காசியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் 135ஆவது இடத்திலும், இலங்கை 121ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 149ஆவது இடத்திலும், சீனா 76ஆவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா 28 ஆவது இடத்திலும், பிரான்ஸ் 25ஆவது இடத்திலும், ஜெர்மனி 15ஆவது இடத்திலும், ரஷ்யா 22வது இடத்திலும், மெக்சிகோ 26வது இடத்திலும் உள்ளன.

அதேநேரத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் தெற்கு சூடான் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் சோமாலியா, வெனிசூலா, சிரியா, ஏமன், லிபியா, ஈகுவடோரியல், கினியா, நிகரகுவா, சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles