எரிபொருட்களின் விலை குறைப்பு !

எரிபொருட்களின் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலை 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன்  அதன் புதிய விலை 310 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன் அதன் புதிய விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles