நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன.
கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டும் நேற்று 200க்கும் மேற்பட்ட எரிபொருள் பவுசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.










