இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்றும், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) குற்றம் சாட்டப்பட்ட நபர் என்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக செப்டம்பர் மாதம் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மேயர் மம்தானி, தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நியூயார்க்பொலிஸ் துறைக்கு (NYPD), நெதன்யாகு போன்ற ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்ய உத்தரவிடுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கு இருக்கிறதா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இது தொடர்பாக நகரத்தின் சட்டத் துறையுடன் தான் “தீவிரமாக ஆலோசித்து” வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
