எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2,500 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலிக்காய்ச்சல் அதிகமாக பதிவாகியுள்ளது.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில் மாத்திரம் 229 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவது நெற்பயிர்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமல்ல என காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles