ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை! இ.தொ.கா தலைவர் வரவேற்பு!!

 

ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தனிப்பட்ட ஒருவரின் இலாபத்திற்காக தடை செய்யபட்ட பொருள் என்று அறிந்தும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை மாபெரும் குற்றமாகும். கடுமையான தண்டனைகள் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகளை முற்றிலும் இல்லாமொழிக்க முடியும். பாதுகாப்பு பொது செயலாளரின் இந்த அறிவிப்பானது வரவேற்தக்க விடயமாகும்.

நாட்டில் 22 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட தரப்பினரே இந்த போதைப் பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர் என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ள நிலையில இவ்வாறான கடுமையான தண்டனைகள் ஊடவே இளைய சமுதாயத்தினரை சரியான பாதைக்கிட்டு செல்ல முடியும் எனவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சியின் இச்செயற்பாடு வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles