ஐ.தே.கவின் சத்தியாக்கிரக போராட்டத்தில் சம்பிக்க அணி பங்கேற்பு!

ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ளாதபோதிலும், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தற்போது பனிப்போர் மூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles