ஐக்கிய தேசியக் கட்சியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சூளுரைத்துள்ளார்.
” வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே மீட்டார். அன்று முதல் இன்றுவரை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான். அந்த கட்சியை அழிக்கவே முடியாது.”” எனவும் ரங்கே பண்டார கூறினார்.
” தற்போது தேசப்பற்று குறித்து கதைப்பவர்கள், தேசம் ஆபத்தில் இருந்தபோது பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக சவாலை ஏற்றார்.” எனவும் ஐதேக பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.










