கஞ்சா விற்றவருக்கு மறியல்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அக்கரைப்பற்று-காதிரிய்யா பீச் ரோட் இல- 246 இல் வசித்து வருபவரும் ரொட்டவெவ- மிரிஸ்வெவ பகுதியில் திருமணமான சித்திக் முஹம்மட் முஸைப் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த கஞ்சா போதை பொருளை குடிப்பதற்காக கொண்டு சென்ற இளைஞரொருவரை பிணையில் செல்வதற்கு திருகோணமலை நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறு கட்டளையிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்று (25) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles