பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்று நேற்றிரவு (07) உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையத்தில் இருந்த மதுபான போத்தல்களும், பணமும் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உரிமையாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி மதுபானக் கடையின் முன்கதவில் இருந்த பூட்டை உடைத்தே கொள்ளையர்கள் உள்நுழைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










