இத்தாலியில் இலங்கை உணவுகளுக்கு முதலிடம்! தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டும் ‘சிறந்த உணவு’ விருதை வென்று சாதனை!!

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உணவுத் திருவிழாவில் (Commonwealth Food Fair), இலங்கை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் ‘சிறந்த உணவு’ (Best Food) விருதை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கிரிக்கெட் கிண்ணப் போட்டியுடன் இணைந்து, கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி ரோம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது.

ரோம் பொதுநலவாய கழகம் (Commonwealth Club of Rome), UISP Roma அமைப்புடன் இணைந்து, இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்று, இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் சிறப்புகளை சர்வதேச பிரதிநிதிகளுக்கு அறிமுகப்படுத்தியது.

இலங்கையின் உணவுக் கூடத்தில் கொத்து ரொட்டி, சிக்கன் ஃபிரைட் ரைஸ், சீனிச் சம்பலுடன் தேங்காய் ரொட்டி, மரக்கறி ரோல்ஸ், சிக்கன் பற்றீஸ், வட்டலப்பம் மற்றும் இலங்கைத் தேநீர் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இந்த உணவுகளை ரோம் நகரிலுள்ள Suresh Food & Drinks உணவகம் தயாரித்து வழங்கியிருந்தது.

உணவுத் திருவிழாவில் மட்டுமன்றி, கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளது.
இலங்கைத் தூதரக கிரிக்கெட் அணி போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றதுடன், ‘சிறந்த அணி சீருடை’ (Best Team Jersey) விருதையும் வென்றுள்ளது.

மரூன் மற்றும் தங்க நிறங்களைக் கொண்ட இலங்கை அணியின் சீருடையில், சிங்கம் மற்றும் தாமரைச் சின்னங்களுடன் ரோம் நகரின் முக்கிய அடையாளங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் தூதரக அணிகள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புகளின் அணி, ரோம் பொதுநலவாய கழக அணி மற்றும் ரோம் சர்வதேச–கசினோ பல்கலைக்கழக அணி ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோ, கிரிக்கெட் விளையாட்டு பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவித்ததுடன், இத்தாலியில் கிரிக்கெட் விளையாட்டின் பிரபல்யம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை முதன்முதலாக 2024ஆம் ஆண்டு இந்த நிகழ்வில் பங்கேற்று சிறந்த உணவுக்கான விருதை வென்றதுடன், கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தது.

2025ஆம் ஆண்டிலும் சிறந்த உணவுக்கான விருதைத் தக்கவைத்த இலங்கை, கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாகச் சிறந்த உணவுக்கான விருதை இலங்கை வென்றுள்ளது.

இவ்வாறான சர்வதேச நிகழ்வுகள் இலங்கையின் உணவுக் கலாச்சாரம், சுற்றுலா, பாரம்பரியம் மற்றும் விளையாட்டுத் துறையை உலகளவில் ஊக்குவிப்பதுடன், இலங்கை – இத்தாலி நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles