கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஆதரிக்க ஐ.ம.ச. நிபந்தனை முன்வைப்பு

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரவளிக்காது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, 29 ஆம் திகதி பொது நிதிக் குழுவுக்குப் பரிந்துரைத்து, சனிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் தம்முடனும் எதிர்க்கட்சித் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடினார் என்று குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா, அந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles