புத்தளம், வென்னப்புவ கடலில் மூழ்கி பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர்.
மேற்படி நால்வரும் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த நிலையில், அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
17,19 மற்றும் 27 வயதுடையவர்களே காணாமல்போயுள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு மற்றும் பொகவந்தலாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.