கண்டி நகரில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்!

 

கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள ஐந்து மாடி தனியார் கட்டடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக கட்டுமானப் பணியின் போது, அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்களும் அவசர சேவைப் பிரிவினரும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கட்டிடத்தின் மேலதிக நிர்மாணப்பணிகள் எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் அவசரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles