கந்தப்பளையில் காடாகிவரும் தனிவீட்டு திட்டம்! எப்போது பயனாளிகளிடம் கையளிக்கப்படும்?

நல்லாட்சியின்போது நுவரெலியா, கந்தப்பளை- தேலமலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தனி வீட்டு திட்டம் இன்னும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை.

வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தற்போது வீடுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே, பல கோடி ரூபா செலவளித்து நிர்மாணிக்கப்பட்ட இவ்வீட்டு திட்டத்தை பூர்த்தி செய்து, மக்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles