‘கப்புட்டா’ களத்தில் – தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், அதன் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ச தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பு, இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இடம்பெறக்கூடும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து, எதிர்வரும் வாரங்களில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles