கம்பளையில் இருவேறு பகுதிகளில் 7 பேருக்கு கொரோனா

கம்பளையில் இருவேறு பகுதிகளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி கடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கம்பளை தொழுவ சுகாதார பிரிவுக்குட்பட்ட கம்பளவத்த பகுதியைச் சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களும், அவருடன் நெருங்கி பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குடும்ப உறுப்பினர்களிடம் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு (இரு ஆண்கள், இரு பெண்கள்) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியைச் சேர்ந்த மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்றாளர்கள் அனைவரும் பொல்கொல்ல கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கம்பளை நிருபர் – லாவண்யா

Related Articles

Latest Articles