கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றி மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் இன்று (10) உயிரிழந்துள்ளார்.
கம்பளை, பிபில பகுதியைச் சேர்ந்த மொஹமட் அயான் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பளை நகரில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் வளாகத்தில் பாரிய மரமொன்றின் கிளை கடந்த 5 ஆம் திகதி முறிந்து விழுந்ததில் 5 வயது மாணவன் ஒருவர் பலியானார்.
படுகாயம் அடைந்த மேலும் இரு மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர் கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றுமொரு சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.